கல்லூரி வளாகத்தில் மாணவருக்கு அரிவாள் வெட்டு!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 05:35 pm
cut-to-the-student-s-at-college-campus

சிவகங்கையில் மர்ம நபர்கள் அரசு கலைக்கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் மன்னர் துரை சிங்கம் அரசு கலை கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். வழக்கம் போல் இன்று கல்லூரிக்கு வந்த ராஜா சக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ராஜாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.

இதையடுத்து, பேராசிரியர் மற்றும் மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close