பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என கூறிய போலி ஆசாமி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 05:55 pm
the-case-was-filed-under-2-sections-on-the-lie-person

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேகமாக காரில் வந்து வழக்கறிஞர்கள் மீது மோதிவிட்டு பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என கூறி தப்ப முயன்ற நபர் மீது காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மிக வேகமாக வந்த சொகுசு கார் மோதி இரண்டு வழக்கறிஞர்கள் காயமடைந்தனர். இதனை கண்ட சகவழக்கறிஞர்கள் காரை சுற்றி வளைத்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் தான் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகாரி என்றும், சிபிஐ அதிகாரி என்றும் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். 

இதையடுத்து வழக்கறிஞர்கள் காரை சோதனையிட்ட போது, காரில் பாராளுமன்ற ஸ்டிக்கர், சிபிஐ, இண்டர்பால், ஏர்போர்ட் அத்தாரிட்டி என பல ஸ்டிக்கர்கள் இருந்தது. இதை கண்ட வழக்கறிஞர்கள் அந்த நபரையும், சொகுசு காரையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

தொடர்ந்து வழக்கறிஞர் அரவிந்த் அளித்த புகாரின் பேரில், விபத்து ஏற்படுத்தியது மற்றும் போலி அடையாள அட்டை வைத்திருந்தது என இரண்டு குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close