மனைவியின் கை,கால்களை வெட்டி குப்பையில் வீசிய கணவர் கைது!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 02:49 pm
the-garbage-warehouse-was-found-the-legs-on-case

மனைவியை கொலை செய்து கை, கால்களை வெட்டி குப்பையில் வீசிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கடந்த ஜன.21ம் தேதி சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்குக்கு வந்த லாரியில், பெண்ணின் வலது கை, 2 கால்கள் துண்டாக வெட்டப்பட்டு சாக்குப்பைக்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தலையும், உடலும் இல்லாததால் கொலை செய்யப்பட்ட பெண் யார் என அடையாளம் தெரியததால், போலீசார் விரல் ரேகை மூலம் அடையாளத்தை கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் இறந்த செல்கள் மூலம் கைரேகை தெளிவாக பெறமுடியாததால் குழம்பி போய் இருந்த போலீசார், தீவிர விசாரணையின் மூலம் தற்போது அந்த பெண் யார் என்பதை கண்டறிந்துள்ளனர்.

அந்த பெண் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்பதும், அவர் கணவர் பாலகிருஷ்ணனுடன் சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசித்து வந்ததாகவும், குடும்ப தகராறு காரணமாக கணவர் தான் அந்த கொலையை செய்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் திரைத்துறையில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கொலை எப்படி நடந்தது, பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் எங்கே? என்பது குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close