பெண் போலீஸ் தற்கொலை: காதலர் கைது!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 10:55 am
lady-constable-suicide-valentine-arrested

திருச்சி மகளிர் சிறைக் காவலர் தற்கொலைக்கு காரணமான அவரது காதலர் வெற்றிவேலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திருச்சி மகளிர் சிறையில் காவலாக பணியாற்றி வந்தவர் செந்தமிழ் செல்வி. இவரும் திருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வரும் காவலர் வெற்றிவேலும் காதலித்து வந்தததாக கூறப்படுகிறது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக பிரிந்துவிட்ட நிலையில், காதலுக்கு நிச்சியதார்த்தம் முடிந்து இன்று (6ம்தேதி) திருமணம் நடைபெற முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனை அறிந்த செந்தமிழ் செல்வி மனமுடைந்து கடந்த 1ம் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டார். 

இந்நிலையில், சிறைக்காவலர் செந்தமிழ்ச் செல்வி இறப்புக்கு காரணமான அவரது காதலர் வெற்றிவேலை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் வெற்றிவேலின் அண்ணன் கைலாசம் மற்றும், அண்ணி ராஜா சுந்தரி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close