கோவையில் 8 கிலோ தங்கம் வழிப்பறி!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 11:49 am
8-kg-gold-robbery-in-coimbatore

கோவை அவிநாசி சாலையில் சென்ற தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவன ஊழியரிடம் இருந்து 8 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். 

கோவை மரக்கடை அருகே செயல்பட்டு வரும் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் ப்ரிதீவ்சிங் (26). இந்நிறுவனம் மூலம் வெளி மாநிலங்களில் உள்ள கடைகளுக்கு விமானம் மூலம் நகைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று காலை 5. 30 மணியளவில் 8 கிலோ தங்கம் கொண்ட பார்சலை விமான நிலையத்திற்கு பிரிதீவ்சிங் இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார்.

அப்போது, அவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற 3பேர், பீளமேடு சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி அருகே அவரது வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியதில் அவர் கீழே விழுந்தார். இதையடுத்து முகத்தில் மிளகாய் தூள் தூவியதோடு அவரை கடுமையாக தாக்கிவிட்டு அவரிடம் இருந்த 8 கிலோ தங்கத்தை பறித்து சென்றனர். 

இது குறித்து ப்ரிதீவ் சிங் அளித்த புகாரின் பேரில், உதவி ஆணையர் பாஸ்கர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close