மனைவியை துண்டு, துண்டாக வெட்டிய வழக்கு: கணவரை பிப்.19ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 04:07 pm
the-chennai-murder-case-court-ordered-to-be-detained-till-feb-19

சென்னையில் மனைவியை கொலை செய்து உடலை வெட்டி வீசிய துணை இயக்குநர் பாலகிருஷ்ணனை வரும் 19ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த ஜன.21ம் தேதி துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் கை, மற்றும் கால்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 2 வாரமாக காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணை, தகவல்கள் அடிப்படையில் கொலைசெய்யப்பட்ட பெண் சந்தியா என்பது தெரியவந்தது. 

இதையடுத்து நேற்று சந்தேகத்தின் அடிப்படையில் சந்தியாவின் கணவரான பாலகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குடும்பதகராறு காரணமாக கொலை செய்து, உடலை வெட்டி தனித் தனியாக சாக்கு பைகளில் கட்டி குப்பை கிடங்கு மற்றும் கூவம் ஆற்றில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து கூவத்தில் போடப்பட்ட உடல் பாகங்களை காவல்துறையினர் மீட்டனர்.  

இந்நிலையில், இன்று மதியம் சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனை காவல்துறையினர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, தான் மனைவியை கொலை செய்யவில்லை என பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இதையடுத்து வரும் 19ம் தேதி வரை அவரை காவலில் வைக்கும்படி ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close