கும்பகோணம்: ராமலிங்கம் கொலை வழக்கில் 5 பேர் கைது !

  டேவிட்   | Last Modified : 07 Feb, 2019 05:34 pm
kumbakonam-ramalingam-murder-case-5-arrested

கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

கும்பகோணம் அருகே, திருப்புவனத்தில், ஹிந்துக்களை, முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டவர்களிடம், அவர்களின் செயலை கண்டித்து பேசிய, பா.ம.க., முன்னாள் நிர்வாகி ராமலிங்கம், வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

இந்நிலையில், சர்புத்தீன் (60), முகம்மது ரிஸ்வான் (23), முகம்மது ரியாஸ் (27), நிஜாம் அலி, த/பெ சர்தார் கான் (33), அஸாருத்தீன் (26) ஆகிய 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இவர்களில் பெரும்பாலானோர் எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அனைவரும் திருபுவனம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. 

கைது செய்யப்பட்டுள்ள 5 நபர்களுக்கும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது .

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close