திருச்சி: கேஸ் நிறுவனத்தில் ரூ.4.95 லட்சம் பணம், கம்யூட்டர் கொள்ளை !

  டேவிட்   | Last Modified : 07 Feb, 2019 05:47 pm
trichy-rs-4-95-lakhs-and-computers-theft-at-manappaarai

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திண்டுக்கல் சாலையில் ஏகாம்பரம் என்பவர் கேஸ் ஏஜேன்சி நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்ற ஊழியர்கள் இன்று காலை கடையை திறக்க வந்த போது கதவில் பூட்டு இல்லாமல் உள்பகுதியில் இருந்த கதவுகள் திறந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் உரிமையாளர் வந்து பார்த்த போது பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.4.95 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் கம்யூட்டர் உள்ளிட்டவைகள் கொள்ளையடித்திருந்தது தெரியவந்தது.
கொள்ளை நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும் கூட அதை திருப்பி வைத்து விட்டு கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சில கம்யூட்டர் பொருட்களையும் கொள்ளையர்கள் உடைத்ததுடன், மதுஅருந்தி விட்டு அந்த மதுபாட்டிலையும் அங்கேயே உடைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close