டாஸ்மாகில் கொலையா ? காவல்துறை தீவிர விசாரணை !

  டேவிட்   | Last Modified : 07 Feb, 2019 06:17 pm
murder-in-chennai-tasmac

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சாமன் உசேன்(36) என்பவர் சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இதே கடையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியப்பன் (42) சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் பணி முடித்துவிட்டு டாஸ்மாக் கடையினுள்ளேயே தூங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவ்விருவருக்கும் இடையே சமையல் செய்வதில் ருசி குறைபாடு காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மேலும் பலமுறை இவ்விருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை டாஸ்மாகை திறக்கும் போது உள்ளே வள்ளியப்பன் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைக்காரர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வள்ளியப்பனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தொடர்ந்து நடத்திய விசாரணையில் சாமன் உசேன் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரது அலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில் சாமன் உசேன் வள்ளியப்பனை கொன்றுவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்ற கோணத்தில் ஆயிரம் விளக்கு காவல்துறையினர் சாமன் உசேனை வலைவீசி தேடி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close