மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது: நவின் சாவ்லா !

  டேவிட்   | Last Modified : 07 Feb, 2019 06:52 pm
can-not-cheat-in-voter-matchine-naveen-chawla

மிண்ணனு வாக்குபதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளதாக முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு புதிய மிண்ணனு வாக்குபதிவு இயந்திரங்கள் செயல்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் நவின் சாவ்லா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது:  

மின்னணு இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பிய நிலையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டு அதில் இயந்திரத்தில் முறைகேடு செய்ய இயலாது என்பது நிரூபணமாகியுள்ளது. பல முறை மிண்ணனு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய இயலாது என்பதை உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் நிரூபித்துள்ளோம். வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள, வேட்பாளர் பெயர் மற்றும் சின்னமானது திரையில் திரையிடப்படும் எனவும் தெரிவித்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறும் குற்றச்சாட்டிற்கு நான் பதிலளிக்க இயலாது.  நான் ஓய்வுபெற்றுவிட்டேன் என்று கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close