சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு !

  டேவிட்   | Last Modified : 07 Feb, 2019 07:15 pm
salem-smart-city-scheme-commissioner-inspected

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலத்தில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கினை நவீன விஞ்ஞான முறையில் சுகாதாரமான பசுமை தலமாக மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.20.58 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் இத்திட்டப் பணிகளை சேலம் மாநகராட்சி ஆணையாளர் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் சதீஷ்,  கடந்த 25 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கில் 2011 முதல் திடக்கழிவு கொட்டுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார காரணங்களை கருத்தில் கொண்டு திடக்கழிவுகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அந்த வகையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 20.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுகாதாரமான பசுமை தளமாக மாற்றியமைக்கும் பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கு பகுதியில் 19 புள்ளி 33 ஏக்கரில் உள்ள திடக்கழிவுகளை 6.70 ஏக்கர் பரப்பிற்கு மாற்றியமைக்கப்பட்டு மற்ற இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புல் தளங்களுடன் கூடிய திறந்தவெளி பூங்கா, விளையாட்டு மைதானம், உடற்பயிற்சிக்கூடம், நடை மேடை உள்ளிட்டவைகள் அமைக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த பணிகள் உரிய காலத்தில் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் அவர்  தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close