சேலம்: மாணவிகளுக்கு மாத்திரை வழங்கிய மாவட்ட ஆட்சியர் !

  டேவிட்   | Last Modified : 08 Feb, 2019 05:43 pm
albendazole-tabs-distributed-to-the-student-at-salem-by-collector

தேசிய குடல் புழு நீக்க தினத்தையொட்டி, சேலத்தில் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரையை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி வழங்கினார். 

குடற்புழு தொற்றினால், ஊட்டச்சத்து குறைபாடு, உடல் சோர்வு, படிப்பில் கவனமின்மை, பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வாந்தி உள்ளிட்டவற்றால், குழந்தைகள், மாணவ, மாணவியர் பாதிக்கும் அபாயம் உள்ளது.  இவற்றைத் தடுக்க, பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்கும் தினம் சேலத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது. 

இதில், 1 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 12 லட்சத்து, 16 ஆயிரம் 326 குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

அதில் ஒரு பகுதியாக சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு குடற்புழு மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி வழங்கினார்.  மேலும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி கூடங்களில் இந்த குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதை பயன்படுத்தி குடற்புழு தொற்றில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close