காஞ்சிபுரம் பேருந்து மீது லாரி மோதிய விபத்து... காயமடைந்த பெண் உயிரிழப்பு !

  டேவிட்   | Last Modified : 09 Feb, 2019 08:14 am
kanchipuram-accident-woman-dead

காஞ்சிபுரம் உத்திரமேரூரில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே நெல்வாய் கூட்டுரோடு என்ற இடத்தில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்ற பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அப்போது பக்கவாட்டு சாலையில் வேகமாமக வந்த லாரி இருசக்கரவானத்தில் வந்த ஒருவர் மீது மோதி, அங்கு பேருந்திற்காக காத்திருந்த ஒரு பெண்னை பேருந்தோடு சேர்த்து நசுக்கியது. இதில் அந்த பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். காவல்துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்திரமேரூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close