உலக நன்மைக்காக சிறப்பு பூஜை: துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்பு..

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 10:28 am
special-pooja-for-world-benefit

கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். 

நவகிரகங்களில் சுக்கிர பகவானுக்கான பரிகார தலமாக விளங்குவது கும்பகோணம் அருகில் உள்ள கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் மூலவர் அக்னீஸ்வரர் சுக்கிரனாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை உலக நன்மைக்காக குத்துவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, தை மாதம் கடைசி வெள்ளியையொட்டி நேற்றிரவு உலக நன்மைக்காக வேண்டி குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்துவிளக்கு பூஜையை துணை சபாநாயகர் தம்பிதுரை தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close