பிறந்த குழந்தையை மருத்துவர்கள் தவறவிட்டதில் குழந்தை இறப்பு!

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 11:16 am
birth-baby-is-death

கோவையில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் தவற விட்டதினால் கீழே விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா மருத்துவமனையில் விக்ரம் என்பவரின் மனைவி பவித்ரா பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குழந்தை இறந்ததாக கூறி மருத்துவர்கள் குழந்தையின் தலையில் தொப்பி அணிந்தபடி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த உறவினர்கள் தொப்பியை கழற்றி பார்த்தபோது, தலையில் காயம் ஏற்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதையடுத்து, இறப்பின் காரணம் மருத்துவமனை நிர்வாகத்தில் விசாரித்தபொழுது, குழந்தை மருத்துவர்கள் கையிலிருந்து தவறி விழுந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இறந்த குழந்தையை கையில் வைத்தபடி பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close