லால்குடி ஜல்லிக்கட்டு போட்டி: 750 காளைகள் பங்கேற்பு

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 01:39 pm
lalgudi-jallikattu-competition-750-bulls-participation

திருச்சி லால்குடியில் மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 750 காளைகளும் 450 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். 

திருச்சி மாவட்டம் லால்குடி கீழவீதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 54ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை லால்குடி வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதை தொடர்ந்து சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் கட்டி தழுவி அடக்கினர். வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close