ஏடிஎம் இயந்திரத்தோடு மல்லுக்கட்டிய குடிமகன் கைது..!

  அனிதா   | Last Modified : 09 Feb, 2019 03:25 pm
a-man-arrested-for-atm-machine-damaged

சென்னை அண்ணாநகர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த நபர், குடிபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சேதப்படுத்திய போது காவல்துறையினர், கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

சேலம் மாவட்டம், கங்கவள்ளி பகுதியை பூர்வீகமாக கொண்ட சங்கர் (22) என்பவர், அயனாவரம் பகுதியில் தங்கியிருந்து மெட்ரோவில் தண்ணீர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று அதிகாலை அண்ணாநகர், சாந்தி கானியில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். குடிபோதையில் இருந்த அவர், ஏடிஎம் இயந்திரத்தில் அட்டையை செலுத்தி ரூ. 5000 பணம் எடுக்க முயன்றதாகவும், பணம் வராததால் மீண்டும் முயற்சித்து விரக்தியடைந்த அவர், பணம் வரும் இடைவெளியில் கையை விட்டு மல்லிகட்டியதாக கூறப்படுகிறது.

 

இயந்திரத்தை தாக்கிய போது, மும்பையில் உள்ள வங்கி கண்காணிப்பு அறையில் அலாரம் அடித்ததை கண்ட வங்கி மேற்பார்வையாளர் இப்ராஹிம் உடனடியாக அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.  ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி நடப்பதாக நினைத்து விரைந்து சென்ற காவல்துறையினர், அங்கு ஏடிஎம் இயந்திரத்தோடு மல்லுக்கட்டி கொண்டிருந்த குடிமகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close