கும்பகோணம் ராமானுஜர் மடத்தில் சிலைகள் திருட்டு!

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 03:48 pm
theft-of-statues-at-ramanuja-monastery-in-kumbakonam

கும்பகோணம் ராமானுஜர் மடத்தில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வெங்கல பெருமாள் சிலை மற்றும் ஸ்ரீதேவி, பூதி தேவி சிலைகளை திருடி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நான்கு சாலை பகுதியில் ஸ்ரீ சீனிவாச ராமானுஜர் மடம் உள்ளது. 70 ஆண்டுகளாக உள்ள இந்த மடத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை சிறப்பு பூஜையும், மார்கழி மாதத்தில் பஜனையும், தீபாவளிக்கு அடுத்த நாள் நோன்பு நிகழ்ச்சியும் நடைபெறும். இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கம் போல் பூஜைக்கு ஆயத்தப்படுத்த மடத்திற்கு வந்த கோவில் நிர்வாகி மடத்தின் பூட்டு, மற்றும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பழங்காலத்து வெங்கல சிலைகளான பெருமாள்,  ஸ்ரீதேவி, பூமிதேவி சிலைகளை  திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருவிடைமருதூரில் உள்ள பஜனை மடத்திலும், பழங்கால சிலைகளும் பழங்கால படங்களும் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close