பள்ளிக்கு செல்லாததை கண்டித்ததால் விஷம் குடித்த சிறுவர்கள்!

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 04:52 pm
children-drinking-poisoned

கும்பகோணத்தில் பள்ளிக்கு செல்லவில்லை என பெற்றோர்கள் கண்டித்ததால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2  சிறுவர்கள் விஷம் அருந்திய சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மேலக்காவேரி ஜாமியா நகர், வடக்கு குடியான் தெருவை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மகன்கள் ஆகாஷ் (8ம் வகுப்பு) மற்றும் ஹரிஷ் (6ம் வகுப்பு) வள்ளலார் பள்ளியில் படித்து வருகின்றனர்.  இன்று இருவரும் பள்ளிக்கு செல்லாததால் அவருடைய தாய் சீதாலட்சுமி அவர்களை கண்டித்துள்ளார். 

இதனால், இருவரும் தாயை மிரட்டுவதற்காக விளையாட்டாக வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் ஆபத்தான நிலையில் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்போது அங்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close