சேலத்தில், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தொடங்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் (EVM-VVPAT) செயல்பாடு குறித்து மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனைத்து வாக்குச்சாவடி மைங்களிலும் மாதிரி வாக்குப்பதிவுகள் நடத்தப்படவுள்ளது.
அந்தவகையில் சேலம் மாவட்டத்திலுள்ள 11 சட்டமன்ற தொகுதிக்கும் தலா 6 விழிப்புணர்வு வாகனங்கள் என மொத்தம் 66 விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ரோகிணி இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஹிணி, ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது மாதிரி வாக்கினை செலுத்தி அதற்கான ஒப்புகைச்சீட்டில் தாங்கள் செலுத்திய வாக்கு விவரத்தினை ( வரிசை எண், சின்னம், வேட்பாளர் பெயர் ஆகியவற்றை ) தெரிந்து கொள்ளலாம். இதில் வாக்காளர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அந்தந்த வாக்குசாவடி மையத்தில் உள்ள தேர்தல் அலுவலர்களிடம் கேட்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.
newstm.in