சாலை பாதுகாப்பு வார விழா: மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு!

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 05:41 pm
road-safety-week-ceremony-students-awareness

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சேலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் வியர் ஹெல் என்ற எழுத்து வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

30வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த 4ம் தேதி முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக சேலத்தில் வட்டார போக்குவரத்து அலுவகங்கள் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வியர் ஹெல்மெட் என்ற எழுத்து வடிவில் நின்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

மேலும், சாலை பாதுகாப்பு குறித்த கோலப்போட்டியில், பள்ளி மாணவ மாணவிகள் வண்ண கோலங்கள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து தத்ரூபமாக கண்முன் நிறுத்தும் வகையில் வரைந்திருந்தனர். இதேபோல், மாணவர்களால் உருவாக்கப்பட்ட சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சியும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி நேரில் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். 

பின்னர், சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, கோல போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close