சேலம்: சாலை பாதுகாப்பு - மாரத்தான்: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 12:58 pm
road-safety-awareness-marathon-more-than-5000-participants

சேலத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்ட  விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 

30 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த 4 ம் தேதி முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக  இன்று சேலம் மாநகர காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

 

இந்த மாரத்தான் போட்டியை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 15 வயதுக்குட்ட ஆண், பெண் பிரிவுகள் மற்றும் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் பிரிவுகள் என 4 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மராத்தான் போட்டியானது அம்பேத்கர் சிலை, வின்சென்ட், காந்திரோடு, அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக சென்று மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது.

தொடர்ந்து அனைத்து பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு  சான்றிதழ்களும், ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் விழிப்புணர்வு மாரத்தானில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாநகர காவல்துறை சார்பில் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு காவல் கண்காணிப்பாளர் வைத்தியலிங்கம்,  போக்குவரத்து காவல் துணை ஆணையர் சியாமளா தேவி, போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர் சத்தியமூர்த்தி,  வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்பட பல்வேறு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close