திருச்சி: பைனான்சியர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 01:13 pm
gold-jewell-robbery-at-home-in-finance-company-owner

திருச்சி உறையூரில் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில், குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 100 சவரன் நகைகள் மற்றும் ரூ.90 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  

திருச்சி மாவட்டம் உறையூர், ராமலிங்க நகரில் வசித்து வருபவர் முருகையன். இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர், அவரது குடும்பத்தினருடன் நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 100 பவுன் நகை மற்றும் 90 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பிசென்றுள்ளனர்.  இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறையூர் காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close