தமிழகத்தில் 1443 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: அமைச்சர் காமராஜ் தகவல்

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 01:21 pm
1443-direct-paddy-procurement-stations-in-tamil-nadu

தமிழகத்தில் இதுவரை 1443 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பேருந்து நிலைய விரிவாக்கப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழகத்தில் இதுவரை 1443 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 6.69 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் பணி தொடங்கி விட்டதாகவும் அறிவித்துள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close