சென்னை: இன்சுலின் மருந்துகளை திருடி விற்பனை செய்த 3 பேர் கைது!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 03:38 pm
3-people-arrested-for-stealing-sales-in-insulin

அப்பல்லோ மருந்தகத்திற்கு விநியோகம் செய்வதற்கென, அந்த நிறுவனத்தின் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த இன்சுலின் மருந்துகளை திருடி வெளி மருந்தகங்களுக்கு விற்பனை செய்து வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அப்பல்லோ மருந்தகங்களுக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள பாலையப்பு ஃபார்மா என்ற தனியார் நிறுவத்தில் இருந்து மருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு விநியோகம் செய்யும் மருந்து பொருட்களில் இன்சுலின் மருந்து எண்ணிக்கை குறைவாக வருவதாக அப்பல்லோ மருந்தக நிர்வாகத்திடம் இருந்து, பாலையப்பு ஃபார்மா நிர்வாகத்துக்கு தொடர் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. 

இதையடுத்து மருந்து விநியோகம் செய்யும் நிறுவனத்தின் மேலாளர் கோவிந்த், இது குறித்து மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின்போது, சப்ளை நிறுவனத்திலிருந்து அப்பல்லோ மருந்தகத்திற்கு மருந்துப் பொருட்களை சப்ளை செய்து வந்த வெங்கடேஷ் குமார் என்ற வாலிபர்  இன்சுலின் மருந்தை திருடி வெளி மருந்தகத்திற்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

பின்னர், வெங்கடேஷ் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஓர் ஆண்டு காலமாக இது போன்று சிறிது சிறிதாக திருடி விற்பனை செய்து வந்ததும், அவருக்கு உதவியாக செனாய் நகர் அப்பல்லோ மருந்தகத்தில் வேலை பார்த்து வரும் விமல் என்பவரும், விழுப்புரம் மாவட்டம் அண்ணாநகர் அப்பல்லோ மருந்தகத்தில் வேலை பார்த்து வரும் சுமேஷ் என்பவரும் உதவியாக இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் 3 பேரிடமும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close