சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 600 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 07:54 pm
600-kg-of-sandalwood-seized-at-central-railway-station

ரயில் மூலம் வட மாநிலத்துக்கு கடத்த முயன்ற 600 கிலோ செம்மரக்கட்டைகளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை அந்தமான் விரைவு ரயிலில் கொண்டு செல்வதற்காக 12 பார்சல்களை எடுத்துவந்து எலக்ட்ரானிக் பொருட்கள் என கூறி தீபக் சிங் (35) என்பவர் பார்சல் பதிவு செய்துள்ளார். ஆனால், எடை அதிகமாக இருந்ததால் சந்தேகமடைந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பார்சலை பிரித்து சோதனையிட்டுள்ளனர்.

அப்போது,12 பெட்டியிலும் சுமார் 600 கிலோ எடையுடைய செம்மரக்கட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து பார்சல் அனுப்ப முயன்ற தீபக் சிங்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது குறித்து ரயில்வே காவல் ஆணையர் லூயிஸ் அமுதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செம்மரக்கட்டைகள் பார்சல் அனுப்ப வந்த தீபக்சிங் தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும், அவர் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு விரைவில் முக்கிய குற்றவாளியை கைது செய்வோம் என தெரிவித்தார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.19 லட்சம் இருக்கும் எனவும், வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்த சீனா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு மருந்து செய்யவும், மரப்பொருட்கள் செய்யவும் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close