அருள் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 07:30 pm
arul-murugan-temple-consecrated

கோவை போத்தனூரில் உள்ள அருள்முருகன் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

கோவை மாவட்டம் போத்தனூர் கடை வீதியில் அமைந்துள்ள 40 ஆண்டு கால சிறப்புமிக்க அருள்முருகன் கோவில், பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முயற்சியோடு புனரமைக்கப்பட்டது. மேலும், புதிதாக அம்மை அப்பர், கால பைரவர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர் சுவாமிகளின் சிலைகள் நிறுவப்பட்டன. 

மராமத்து பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை தமிழ் முறைப்படி திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கெளமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபரசுவாமிகள், பேருராதினம் குருமகா சன்னிதானம் சாந்தலிங்க ம௫தாச்சல அடிகளார், பிள்ளையார் பீடம் தவத்தி௫ பொன்மாணிக்கவாசகர் அடிகள் மற்றும் கோவில் அர்ச்சகர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலையில் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close