பொது வழி ஆக்கிரமிப்பு: பிணத்தை எடுத்து செல்ல மறுப்பு தெரிவித்ததால் போராட்டம்

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 07:52 pm
general-way-occupation

பொது பாதையை ஆக்கிரமித்து இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த தனி நபரை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். 

சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே உள்ள பவாயி வட்டம் என்ற பகுதியில் 27 வீடுகள் உள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பொது வழியாக உள்ள 4 அடி நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வேலி  அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி மஞ்சுளா(32) சனிக்கிழமை உயிரிழந்ததையடுத்து அவரை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு சென்ற போது, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த பழனிசாமி மற்றும் உறவினர்களை அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 2 மணிக்கு உடலை வீட்டிற்கு எடுத்து சென்றதாகவும், மீண்டும் இன்று அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்ற போது, வேலி அமைத்து தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஆகாததால், அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close