சாலை பாதுகாப்பு குறித்த சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 12:26 pm
special-postal-stamp-exhibition-on-road-safety

திருச்சியில் சாலை  பாதுகாப்பு வார விழிப்புணர்வு விழாவையொட்டி நடைபெற்று வரும் சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.   

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 30வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கடந்த ஒரு வார காலமாக ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருச்சி அருங்காட்சியகத்தில் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில், சிறப்பு  அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது. 

இந்த கண்காட்சியில் இந்திய அஞ்சல் துறை போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதற்காக வெளியிட்ட சிறப்பு அஞ்சல் உறைகள் மற்றும் முத்திரைகள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் சாலை விதிகள், சாலை குறியீடு, நடைபாதைகள், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் ஒலிப்பான்கள் ஒலிக்கக் கூடாது, ஒருவழிப்பாதை வாகனங்கள், ஓட்டும்போது மது அருந்தி இருக்கக் கூடாது, பாதசாரிகள் நடப்பதற்கான நடைபாதையை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு சாலை விதிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கடை பிடிக்க வேண்டியதன் அவசியத்தை அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் பார்வையாளர்கள் மத்தியில் வலியுறுத்தி உரையாற்றினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close