இராமலிங்க சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 12:41 pm
ramalinga-swamy-temple-consecrated

கும்பகோணம் அருகேயுள்ள பாபநாசத்தில் அமைந்துள்ள இராமலிங்க சுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் 108 சிவாலயம் என அழைக்கப்படும் இராமலிங்க சுவாமி ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது. இலங்கையில் நடைபெற்ற ராவணன் வதத்திற்குப் பிறகு  ராமர் அயோத்தி செல்லும் வழியில் தனது  பாப தோஷங்கள் நீங்குவதற்காக லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் என்பதால் இவ்வாலயம் ராமலிங்க சுவாமி ஆலயம் என்றழைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாலயத்தின் ஒரு பகுதியில் ஒரே இடத்தில் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த ஆலயம் 108 சிவாலயம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு அம்சங்கள் நிறைந்த சிவாலயத்தில் இன்று  மகா கும்பாபிஷேக விழா  வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியை தரிசித்துச் சென்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close