கோவையில் பிரபல ரவுடி குத்திக் கொலை!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 02:52 pm
the-famous-rowdy-murder-in-coimbatore

கோவை புலியங்குளத்தில் பிரபல ரவுடி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை புலியங்குளம் சிறு காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் லியோ மார்டின். இவர் மீது கொலை மற்றும் அடி தடி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்றிரவு அலமேலுமங்கா லே அவுட் பகுதியில் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த லியோவை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து இராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ரவுடி லியோ மார்டின் மதுபோதையில், புலியகுளம் துல்லா ஆறுமுகம் வீதியை சேர்ந்த தருண் (எ) இன்பிரண்ட்ராஜன், மற்றும் கொண்டசாமி கோவில் வீதியை சேர்ந்த சண்முகம் ஆகியோரிடம் கஞ்சா கேட்டு மிரட்டியதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு பேரும் ரவுடி லியோ மார்டினை கத்தியால் குத்தியதும்  விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவான 2 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close