தாய், குழந்தைகளுடன் தீ குளிக்க முயற்சி!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 04:16 pm
mother-try-to-bathe-the-fire-with-the-kids

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தாய், குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தணை அடுத்த நெடுங்குளத்தை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் கணவர் இறந்த நிலையில் தனது தந்தையின் பூர்வீக வீட்டில் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், பஞ்சவர்ணத்தின் சகோதரர்கள் அவர்களை வீட்டை விட்டு துரத்திவிட்டதாகவும், இது குறித்து சோழவந்தான் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வந்த பஞ்சவர்ணம் திடீரென தனது குழந்தைகள் முத்து தர்ஷினி (12) கருப்பசாமி (9) உடலில் மண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த காவல்துறையினர், செய்தியாளர்கள் உடனடியாக அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விசாரணைக்காக 3 பேரும் காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close