சேலம்: காவல்துறை அதிகாரி  மீது தொழிலாளி நில மோசடி புகார் !

  டேவிட்   | Last Modified : 11 Feb, 2019 09:31 pm
salem-complaint-against-police-officer

சேலத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது தொழிலாளி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கோட்டமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் செங்கல் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள மனுவில்:

எனக்கு தொழில் செய்ய பண உதவி தேவைபட்டது. அப்போது, சேலம் சூரமங்கலத்தில் வசித்துவரும் காவல்துறை அதிகாரி லட்சுமணன் என்பவரிடம் கடன் பெற்றேன். அதற்கு ஆதரமாக சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 1.30 ஏக்கர் நிலத்தை காவல்துறை அதிகாரியின் அக்காள் கணவரது பெயரில் பதிவு இல்லாத பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டார்.

தற்போது நான் கடனை திருப்பி தர தயாராக உள்ளேன். ஆனால் காவல்துறை அதிகாரி என்னிடம் மேலும் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகிறார். எனவே உரிய விசாரணை நடத்தி எனது நிலத்தை மீட்டுக்கொடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.            

காவல்துறை அதிகாரி ஒருவர்மீது தொழிலாளி நிலமோசடி புகார் அளித்துள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close