திருச்சி: சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி !

  டேவிட்   | Last Modified : 11 Feb, 2019 09:05 pm
trichy-traffic-awareness-rally

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டார காவல் துறையும் தனியார் இரு சக்கர விற்பனை நிறுவனமும் இணைந்து காட்டூர் மஞ்சத்திடல் பாலத்தில் நடத்திய 30வது சாலை பாதுகாப்பு வார விழாவை காவல்துறை டிஐஜி லலிதா லட்சுமி தொடங்கி வைத்தார். 

தமிழக அரசு சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் வட்டார காவல்துறை மற்றும் தனியார் இசக்கர வாகன விற்பனை மையமும் காட்டூர் மஞ்சத்தில் பாலத்தில் நடத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை டிஐஜி லலிதா லெட்சுமி தொடங்கி வைத்தார். எஸ்பி ஜியா உல் ஹக், திருவெறும்பூர் ஏஎஸ்பி பிரவின் உமேஷ்டோங் ரே ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி காட்டூர் மஞ்சத்திடல் பாலத்தில் தொடங்கி திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆயில் மில், பெல் கனேசபுரம் வழியாக சென்று மீண்டும் மஞ்சத்தில் பாலத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close