பெற்றோருக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்ற மாணவர்கள்!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 10:31 am
students-have-received-blessings-in-their-parents

திருச்சி தனியார் பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பெற்றோருக்கு பாத பூஜை செய்து, ஆசி பெற்றது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன. இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பெற்றோர்கள் ஆசி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் பெற்றோரின் பெருமைகளை உணரும் வகையிலும், பெற்றோர்களின் ஆசி பெற்று சிறப்பாக தேர்வு எழுதும் நோக்கிலும் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவ, மாணவிகள் பெற்றோர்களின்  பாதங்களில் சந்தனம், குங்குமம் வைத்து மலர் தூவி பாத பூஜை செய்து, அவர்கள் முன்பு தீபம் ஏற்றி  வணங்கி ஆசி பெற்றனர். பாத பூஜையின் போது மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற  காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி, மாணவ மாணவிகள் திறம்பட தேர்வு எழுதும் வகையில் ஊக்கப்படுத்தி உரையாற்றினார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close