சின்னதம்பியும், வனத்துறையினரும்: பாதிக்கப்படும் விவசாயிகள்

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 10:38 am
chinna-thambi-vs-forest-department-vulnerable-farmers

தண்ணீர் தேடி அலையும் சின்ன தம்பிக்கு உடனடியாக தண்ணீர் கொடுத்து விவசாய நிலத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோவையில் சுற்றித்திரிந்த காட்டு யானை சின்ன தம்பியை வனத்துறையினர் பிடித்து டாப்ஸ்லி வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். ஆனால், அங்கிருந்து வெளியே வந்த சின்னத்தம்பி திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே சுற்றித் திரிகிறது. கடந்த 2 நாட்களாக கரும்பு காட்டுக்குள் இருந்த சின்னத்தம்பி இன்று தண்ணீர் தேடி வயல்வெளிக்கு வந்தது. ஆனால் தண்ணீர் தென்படாததால் வாழை இலைகளை ஒடித்து சாப்பிட்டது. 

யானை இருக்கும் இடத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உடுமலைப்பேட்டையின் எல்லைப் பகுதியில் அமராவதி ஆறு உள்ளது. இந்த ஆற்றை கடந்தால் திண்டுக்கல் மாவட்டம் வந்துவிடும் என்பதால் வனத்துறையினர் அப்பகுதிக்கு யானை செல்ல தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் மறுபுறத்தில், திண்டுக்கல் பகுதிக்குள் வந்து விடாமல் இருக்க அதிகாரிகள், வனத்துறையினர் பட்டாசு வெடித்து, கற்களை எரிந்து உடுமலைப்பேட்டைக்குள் விரட்ட தயாராக இருக்கின்றனர். 

வனத்துறையினர் மற்றும் சின்னத்தம்பியிடையே நடக்கும் யுத்தத்தில் விவசாய நிலங்களும், விவசாயிகளுமே பாதிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில் யானையை விவசாய நிலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close