ராமலிங்கம் படுகொலை: தஞ்சையில் முழு அடைப்பு போராட்டம்

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 11:45 am
bandh-in-thanjavur

திருபுவனம் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து தஞ்சாவூரில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக முன்னாள் நகரச் செயலாளர் இராமலிங்கம் கடந்த 5ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சாவூரில் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. 

அதன்படி, இன்று திருபுவனம், திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர் ,போன்ற இடங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கும்பகோணம் நகரிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.  படுகொலையான ராமலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் இன்று கும்பகோணத்தில் அமைதிப் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளன.

பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதோடு, தடையை  மீறி பேரணி நடத்தினால் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கும்பகோணம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close