அரசு பேருந்தை வழிமறித்த யானைகள்... பதட்டமான வீடியோ காட்சி !

  டேவிட்   | Last Modified : 12 Feb, 2019 04:03 pm
elephants-stood-in-front-of-government-bus

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து தெங்குமரஹாடா செல்லும் வழியில் அரசு பேருந்தை ஒரு மணி நேரமாக நான்கு யானைகள் வழி மறித்துள்ளன. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மிகவும் பதட்டமடைந்தனர். 

சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தெங்குமரஹாடா என்ற கிராமத்திற்கு செல்ல தினமும் இரண்டு அரசு பேருந்துகள் மட்டுமே சென்று வருகிறது. அதில் ஒன்று கோத்தகிரியில் இருந்து வரும் அரசு பேருந்து ஆகும். சுமார் 4.00 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தெங்குமரஹாடா செல்வதற்காக வந்த அரசு பேருந்து, காராச்சிக்கொரை கிராமத்தை தாண்டி சென்ற போது, திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த நான்கு காட்டு யானைகள் அரசு பேருந்தை வழிமறித்து நடுரோட்டில் நின்று மிரட்டியது.

பேருந்தை நோக்கி முன்னேறிய காட்டு யானைகள் சுமார் ஒரு மணி நேரம் காட்டிற்குள் செல்லாமல் நின்றதால், பயணிகள் அச்சமடைந்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றபிறகு, அரசு பேருந்து பயணிகளுடன் பத்திரமாக நகர்ந்து சென்றது. இதன் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close