விபச்சார பெண் தரகர் உட்பட 2 பேர் கைது!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 04:12 pm
3-women-are-arrested-for-involved-in-prostitution

கோவையில் விபச்சார பெண் தரகர் உட்பட 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கோவை குனியமுத்தூர் பகுதிகளில் விபச்சாரம் நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து  கோவை குனியமுத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் கணேஷ் குமார் உத்தரவின் பேரில் துணை காவல் ஆய்வாளர் குப்புராஜ் தலைமையில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது சந்தேகத்திற்கு இடமான வீட்டை சோதனையிட்டதில், வெளி மாநிலத்தை சேர்ந்த  2 இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்து விசாரித்ததில், கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த தேவி (52) என்பவர் தரகர் தொழில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தேவியை கைது செய்த காவல்துறையினர் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close