7ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 04:47 pm
father-arrested-in-the-pocso-act

கோவையில் 7ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் பூலுவம்பட்டி அருகே  உள்ள வெள்ளிமேடு பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சிறுமியின் தந்தை 3ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். சிறுமியின் தாய் தனியார் பள்ளி ஒன்றில் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்த மாணவிக்கு அவரது தந்தை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது தொடர் கதையாகியுள்ள நிலையில், இதனை அறியாத அவரது தாயார் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, மகள் கர்ப்பமாகி இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த தாய் இது குறித்து மகளிடம் விசாரித்தபோது, தந்தை தான் காரணம் என மகள் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தாயார் அளித்த புகாரின் பேரில், தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.  கோவையில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவது, வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே செல்வபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தந்தை மற்றும் அவரது சகோதரர் இணைந்து சிறுமியை கற்பழித்த சம்பவத்தில் இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close