ராமலிங்கத்தின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத் 

  டேவிட்   | Last Modified : 12 Feb, 2019 07:29 pm
need-justice-for-ramalingam-family-arjun-sampath

திருபுவனத்தில் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் குடும்பத்திற்கு நிவாரணமாக அரசு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். 

கடந்த 5ஆம் தேதி கும்பகோணம் அருகே திருபுவனத்தில் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இறந்துபோன ராமலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தது. படுகொலை செய்யப்பட்ட திருபுவனம்  ராமலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கும்பகோணத்தில் அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் அமைதி பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த பேரணி பேரணிக்கு காவல்துறை தடைவிதித்தது.

இப்பேரணியில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வரும் வழியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அரசு வழங்க வேண்டும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்ய வேண்டும் என்றும், உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ராமலிங்கத்தின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் இன்று கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close