ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்ச்சி, போலீசார்-கொள்ளையன் மோதல் !

  டேவிட்   | Last Modified : 12 Feb, 2019 08:27 pm
idbi-atm-broken-by-unknown-one-arrested

பெரம்பலூர், திருச்சி சாலையில்   வெங்கடேசபுரம் தெருவில் உள்ள IDBI - வங்கியின் ATM - யை மர்ம நபர் ஒருவர் உடைத்தபோது அதை பார்த்த ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதனை  தொடர்ந்து அங்கு வந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த கண்ணன் என்பவர் கொள்ளையனை பிடிக்க முற்பட்டபோது, கண்ணனின் தலையில் பலமாக அடித்து தப்பி ஓடினான். அப்போது அங்கு வந்த மற்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் கொள்ளையனை துரத்தி சென்று பிடித்து சரமாரியாக தாக்கினர்.  காயமடைந்த கொள்ளையனை போலீசார்  அரசு மருத்துவமனையில் சேர்த்து  சிகிச்சை அளித்து வருகின்றனர்.  தலையில் காயமுற்ற ஊர்க்காவல் படையை சேர்ந்த கண்ணனும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

ஏடிஎம்மில் உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்தவன், அரசு மருத்துவமனையில் துப்புரவு மற்றும் பாதுகாப்பு  பணியாளர்களுக்கு  மேற்பார்வையாளராக பணியாற்றும் தனுஷ் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் துறையினர்  வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close