சேலம்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம் !

  டேவிட்   | Last Modified : 12 Feb, 2019 08:42 pm
salem-100s-of-youth-attended-job-camp

சேலத்தில் நடைபெற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்வின் போது, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுமார் 50 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி வழங்கினார்.

தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சேலம் 5 ரோடு அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நகர்புற வளர்ச்சிக்கான பெருவிழா மற்றும் இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் இன்று (டிச.12) நடைபெற்றது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தொடங்கி வைத்து பார்வையிட்டார். 

இந்த முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 39 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றது. இதில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களில் பணியாற்ற தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். 

தொடர்ந்து நடைபெற்ற நகர்புற வளர்ச்சிக்கான பெருவிழா நிகழ்ச்சியில் ஒன்பது மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுமார் 50 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close