சேலம்: பாரம்பரிய உணவுத் திருவிழா....!

  டேவிட்   | Last Modified : 12 Feb, 2019 09:06 pm
salem-food-carnival-inaugurated-by-salem-collector-rohini-ias

சேலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகளில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. 

இந்த திருவிழாவில் சேலம் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிறுதானியங்களைக் கொண்டு சாம உருண்டை,  கம்பு உருண்டை,  அல்வா சிறுதானிய பாயாசம் சிறுதானிய ஒப்புட்டு வகைகள், சுண்டல் வகைகள், பணியார வகைகள் உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தானிய உணவு வகைகள் வைக்கப்பட்டு இருந்தன. 

மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறைகள் பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் இந்த பாரம்பரிய உணவு திருவிழாவில் இடம் பெற்றிருந்தன. 

மேலும் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் எந்தெந்த காலகட்டத்தில் என்னென்ன உணவுகள் வழங்க வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 

 

குழந்தைகளுக்கு சத்துமாவு கொண்டு தோசை பாயாசம் வகைகள் உள்ளிட்ட குழந்தைகளை கவர்கின்ற வகையில் உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த பாரம்பரிய உணவுத்திருவிழாவை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி துவக்கி வைத்து பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை சுவைத்துப் பார்த்தார்.  திருவிழாவில் திட்ட அலுவலர் தேவிகுமாரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உணவுகளை சுவைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close