30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 11:07 am
bus-accident-in-salem

சேலம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பேருந்து ஒன்று சேலம் மாவட்டம் கொண்டலாம்படி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது, 30 அடி உயர பட்டர்பிளை பாலத்தில் இருந்து குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த தனசேகர் (35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பணம் செய்த 16க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தால் பட்டர்பிளை பாலம் பகுதியில் இருந்து வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் ரோஹிணி, சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கர், துணை ஆணையாளர்கள் தங்கதுரை சியாமளா தேவி  ஆகியோர் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். மேலும் படுகாயமடைந்த ஓட்டுநர் சரவணம் உட்பட 16 பேரை  உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பேருந்து கவிழ்ந்தற்கு  முக்கிய காரணம் பேருந்தின் மேல்பகுதியில் அதிகளவில், துணி பண்டல்கள் மற்றும் மளிகை சாமான்கள், பார்சல்கள் என மலைபோல் அடுக்கி எடுத்து வந்ததால் பாரம் தாங்காமல் பேருந்து கவிழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close