கோவையில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில் நேற்றிரவு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ஐம்பொன் சிலை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பட்டத்தரசியம்மன் கோவில் இந்து அறநிலையதுறையின் கட்டுபாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் நேற்றிரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன் சிலையை திருடி சென்றுள்ளனர்.
மேலும் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் எடுத்து சென்றுள்ளனர். இன்று காலை கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த பொதுமக்கள், காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் பந்தயசாலை காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் திருடர்களை தேடி வருகின்றனர். திருடப்பட்ட சிலையின் மதிப்பு பல இலட்ச ரூபாய் இருக்குமென கூறப்படுகிறது.
newstm.in