ஜவுளிக்கடையில் நூதன திருட்டு: கேமராவில் மாட்டிக்கொண்ட பெண்கள்..!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 01:50 pm
theft-in-the-cloth-shop

சென்னையில் தனியார் ஜவுளிக்கடையில் புடவைகள் வாங்க வந்தது போன்று நடித்து சுமார் ரூ.1.15 லட்சம் மதிப்புடைய புடைவைகளை திருடி சென்ற பெண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சென்னை அசோக் நகர் 10வது அவென்யூ பகுதியில் உள்ள தனியார் ஜவுளிக் கடை ஒன்றில் நேற்று மதியம் 4 பெண்கள் பட்டுபுடவை வாங்க வந்துள்ளனர். இந்நிலையில் கடை ஊழியர்கள் அந்த 4 பெண்களுக்கும் பட்டுபுடவைகளை காட்டி கொண்டிருக்கும்போது அவர்களை திசைதிருப்பி சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்புடைய 16 பட்டுப்புடவைகளை திருடி அவர்கள் உடுத்தியிருக்கும் புடவையினுள் மறைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

அந்த பெண்கள் புடவைகள் வாங்காமல் சென்ற நிலையில், புடவைகள் குறைந்திருப்பதை உணர்ந்த ஊழியர்கள் கடை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடையின் உரிமையாளர் குமரன் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது புடவைகளை திருடி சென்றிப்பது தெரியவந்தது. இதுகுறித்து குமரன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த 4 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close