நெடுஞ்சாலையில் பெண்ணை கடத்த முயற்சி: துரத்தி பிடித்த பொதுமக்கள்!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 04:34 pm
people-chased-who-tried-to-kidnap-the-girl

திருச்சியில், சாலையோரம் நின்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை  காரில் கடத்தி செல்ல முன்ற நபரை பொதுமக்களே பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.  

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுப்பட்டி அருகே உள்ள திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை, திண்டுக்கல்லில் இருந்து காரில் வந்த ஒருவர் திடீரென காரில் ஏற்றி கடத்திச் சென்றதைப் பார்த்த பொதுமக்கள் காரை விரட்டிச் சென்றனர்.

பொன்னம்பலம்பட்டி அருகே காரை மடக்கிப் பிடித்த கிராம மக்கள் அந்த பெண்ணை மீட்டு கடத்திச் சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் வர காலதாமதமானதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தி அந்த நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் பெண்ணை கடத்திய நபர் திருச்சி தென்னூரைச் சேர்ந்த இஸ்மாயில் (42) என்பதும், பல்வேறு காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close