காதலர் தினம்: இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு !

  டேவிட்   | Last Modified : 13 Feb, 2019 07:06 pm
hindu-organisation-against-to-valentines-day-55-arrested

நாளை (பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், காதலர் தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை காந்திபுரம் பகுதியில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்தும் எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உலகம் முழுவதும் சர்வதேச காதலர் தினம் நாளை (பிப்.14) கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணியினர் 50க்கும் மேற்பட்டோர் கிராஸ் கட் சாலையில் ஊர்வலமாக சென்று காதலர் தின எதிர்ப்பு முழக்கமிட்டனர். அப்போது காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து, அவற்றை தீயிட்டு எரித்தும், காலணியால் அடித்தும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் காதலர் தினத்தின் போது காதல் என்ற பெயரில் அத்துமீறும் அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.  காவல்துறையினரின் அனுமதியை மீறி ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்திய இந்தி முன்னணி அமைப்பினர் சுமார் 55 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close