ஓ... இப்படியும் சான்றிதழ் பெறலாமா...?

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 07:50 pm
no-caste-no-religion-certificate

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சினேகா என்பவருக்கு ‘சாதி மற்றும் மதம் அற்றவர்’ என திருப்பத்தூர் வட்டாட்சியர் சான்றிதழ் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சினேகா. இவர், பல ஆண்டுகளாக 'தான் எந்த சாதியையோ, மதத்தையோ சார்ந்தவர் இல்லை' என சான்றிதழ் பெற முயற்சி செய்துள்ளார். 

இந்நிலையில் சினேகாவுக்கு, திருப்பத்தூர் வட்டாட்சியர் கடந்த 5.2.2019 அன்று, 'இவர் எந்த சாதி மற்றும் மதம் அற்றவர்’ என சான்றிதழ் வழங்கியுள்ளதாக தெரிகிறது. தன்னை ‘சாதி மற்றும் மதம் அற்றவர்’ என அரசின் சான்றிதழ் மூலமாக பெருமையுடன் பறைசாற்றி வருகிறாராம் சிநேகா.

ஆனால் “சாதி மற்றும் மதம் அற்றவர்“ என சான்றிதழ் அளிக்க வட்டாட்சியருக்கு அதிகாரம்இருக்கிறதா? அரசின் அனைத்துவிதமான படிவங்களிலும் சாதி, மதம் குறிப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளபோது, திருப்பத்தூர் வட்டாட்சியர் எப்படி இது போன்ற சான்றிதழை வழங்கினார்? அல்லது வட்டாச்சியர் பெயரில் மாேசடி நடந்துள்ளதா? சமூக வலைதளங்களில் உலவும் இந்த தகவல் உண்மைதானா அல்லது வெறும் வதந்தியா?  என பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. 

 இது குறித்து, தமிழக அரசு அல்லது துறை சார் உயர் அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close